
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிப்பு -கல்வி அமைச்சின் செயலாளர்
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
இந்த நேர நீடிப்பானது தரம் 5 இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்படும்.
முதலாம் மற்றும் 2ஆம் தரங்களுக்கு காலை 7.30லிருந்து 11.45 வரை கற்றல் நடவடிக்கைகள் மாற்றமின்றி முன்னெடுக்கப்படும்.
03, 04ஆம் தர மாணவர்களுக்கு 7.30 லிருந்து 1.00 மணி வரை மாற்றமின்றி இருக்கும் .
05 ஆம் தரத்திலிருந்து நேர மாற்றம் ஏற்படும். 05ஆம் தர மாணவர்களுக்கு 7.30லிருந்து 2.00 மணிவரை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.
இதனடிப்பையில் 06ஆம் தரத்திலிருந்து 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 முதல் பகல் 2.00 மணிவரை இடம்பெறும்’’ என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.

