இன்று தங்கத்தின் விலை 10000 ரூபாய் குறைவடைந்துள்ளது

இன்று தங்கத்தின் விலை 10000 ரூபாய் குறைவடைந்துள்ளது

நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று நாட்டில் தங்கத்தின் விலை 10,000 ரூபாயால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று . “22 கரட்” தங்கம் பவுண் ஒன்று 305,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது .
நேற்று இதன் விலை 315,500 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நேற்று கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட “24 காரட்” ஒரு பவுண் தங்கம் இன்று 10,000 ரூபாயால் குறைந்து 330,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )