
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் கைதி மீது கொலைமுயற்சி
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை உணவு தட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ,தெவுந்தர விஷ்னு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கைதி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

