
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணை உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணை உள்கட்டமைப்புகள் மீது சக்தி வாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது
இதன் இ மூலம் அமெரிக்கா போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஆழமாகப் புதைக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட ஈரானின் தளங்களை அழிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 5,000 பவுண்டு எடை கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் கப்பல் எதிர்ப்பு குரூஸ் ஏவுகணை அமைப்புகளையும், நிலத்தடி ஏவுதளங்களையும் குறிவைத் து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி பாதையில் ஈரானின் நடவடிக்கைகளால் , உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாக வாஷிங்டன் கூறுகிறது.
ஹோர்மோஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில் அவை உடன் போருக்கு வர மறுத்தன .
இந்நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹோர்மோஸ் நீரிணை வழியாக செல்லும் எதிரிநாட்டு கப்பல்களை ஈரான் நீருக்கடியில் கண்ணி வெடி வைத்து தகர்கின்றதுஎனவும் ,
கண்ணிவெடிகள் மட்டுமன்றி ,ஈரானின் புரட்சிகர காவல் படை ஆயுதம் ஏந்திய வேகப்படகுகள், கடற்படை “தற்கொலை” டிரோன்கள் மற்றும் கடற்கரை ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் திறன் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,நிலத்தடி சுரங்கங்களில் அதிக எண்ணிக்கையிலான படகுகள் மற்றும் டிரோன்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும்
இரான் செய்தி நிறுவனமான ‘ஃபார்ஸ்’ வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

