
மாகல்ல ஏரியில் விழுந்து ஒருவர் காணாமல் போயுள்ளார்
நிகவெரட்டிய, மாகல்ல ஏரியில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் ஏரியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து நிகவெரட்டிய போலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
நிகவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகவெரட்டிய போலீசாருடன் இணைந்து அப்பகுதி மக்களும் நீரில் மூழ்கி காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

