அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரும்21 ஆம் திகதி பேரணிக்கு வாருங்கள்                                                                                                                          இது எவரையும் தலைவனாக்கும் போராட்டம் அல்ல

அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரும்21 ஆம் திகதி பேரணிக்கு வாருங்கள் இது எவரையும் தலைவனாக்கும் போராட்டம் அல்ல

அரசாங்கம் அரச ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறினார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது .

தேசிய பாதுகாப்பு சரிந்துவிட்டது .
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிச்சுமையால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் .
அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரும் , நுகேகோடயில் நவம்பர் 21 திகதி நடைபெறும் எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்

இது யாரையும் நாட்டின் தலைவனாக்கும் போராட்டம் அல்ல, மாறாக மக்கள் சார்பாக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கான போராட்டப் பேரணி “என்று நாமல் ராஜபக்சே மேலும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )