
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்.
சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 62, இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
காலமாகிய தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பல அரசு நிறுவனங்களின் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

