சுற்றுலா பயணியின் தவறால் தீப்பிடித்த சீனாவின் சுற்றுலா தலக் கட்டடம்

சுற்றுலா பயணியின் தவறால் தீப்பிடித்த சீனாவின் சுற்றுலா தலக் கட்டடம்

சுற்றுலா பயணி ஒருவரின் தவறான கையாள்கையினால் சீனாவின் பிரசித்தி பெற்ற கோவில் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் கட்டம் முற்றிலும் சேதமாகியுள்ளது.

சீனாவின் Jiangsuஜியாங்சு மாகாணம், ஜாங்ஜியாகாங் (Zhangjiagang) நகரில் உள்ள ஃபெங்குவாங் டவுன்ஷிப்பில் (Fenghuang township) உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயில் வளாகத்தில் இருந்த வென்சாங் மாளிகை (Wenchang Pavilion) கட்டடமே இவ்வாறு தீவிபத்திற்காளாகியுள்ளது.

இந்த பிரசித்தி பெற்ற கோவில் வளாகத்தில் உள்ள பல அடுக்கு கொண்ட வென்சாங் மாளிகை (Wenchang Pavilion) 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது .

சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த கட்டடத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணி ஒருவர் மெழுகுவர்த்தியையும், ஊதுவர்த்தியையும் ஏற்றும்போது அவற்றை தவறாக கையாண்டதன் காரணமாக கட்டம் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

தீப்பற்றி இருந்ததில் அதன் கான்கிரீட் சட்டகம் மட்டுமே எஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ வேகமாக பரவியது.

இந்த கட்டடத்தின் கூரைப் பகுதி தீப்பிடித்து எரிந்தவாறு விழுகின்ற மற்றும் அடர்த்தியான கரும் புகை மேலெழும் காட்சிகள் குறித்த
வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த கட்டடத்தில் எந்த கலாசார நினைவு சின்னங்களும் வைக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )