
ஜெர்மனியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய இராணுவ சேவை
நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி இராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் வலிமையான இராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்காக கட்டாய இராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும். இந்த இராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பான மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
CATEGORIES World News

