
போதைப் பழக்கமற்ற சமூகத்தை உருவாக்க புனர்வாழ்வு முகாம் ஆரம்பம்
“போதைப் பழக்கமற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளுடன் கூடிய “புனர்வாழ்வு முகாம்” 14 நாள் சமூக அடிப்படையிலான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு முகாம் வாரியபொல ஸ்ரீ சுமங்கல பிரிவேனா விகாரையில் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் Clean Sri Lanka பொதுச் செயலாளர் அலுவலகம் என்பன இணைந்து இந்த முகாமை நடைமுறைப்படுத்தியுள்ளன.
நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாம் டிசம்பர் 01 ஆம் திகதி வரை நடைபெறும்.
CATEGORIES Sri Lanka

