
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான200 மில்லியன் பெறுமதியான ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டன
”தெஹி பாலே’ என்ற போதைப்பொருள் என்ற கடத்தல்காரருக்கு சொந்தமான ஐந்து மீன்பிடி படகுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திக்வெல்ல மீன்வளத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தபோது ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 200 மில்லியன் என்றும் கூறப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

