அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை334 ஆக அதிகரிப்பு370 பேர் காணாமல் போயுள்ளனர்1,118,929 பேர் பாதிப்பு

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை334 ஆக அதிகரிப்பு370 பேர் காணாமல் போயுள்ளனர்1,118,929 பேர் பாதிப்பு

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.

309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 71 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 68 பேரும், குருநாகலையில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலையில் 35 பேரும் அனர்த்தத்தில் காணாமல் போயுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )