வடக்கு மேல் சபரகமுவ தென் மாகாணம் கண்டி நுவரெலியா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

வடக்கு மேல் சபரகமுவ தென் மாகாணம் கண்டி நுவரெலியா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே மையம் கொண்டுள்ளது.

இந்த அமைப்புநாட்டிலிருந்து வடக்கு நோக்கி நகரும்போது மேலும் பலவீனமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, மேல் , சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்.

பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )