ஜப்பானிய வைத்திய குழு இலங்கைக்கு வருகை                                          பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார உதவிகளை வழங்க நடவடிக்கை

ஜப்பானிய வைத்திய குழு இலங்கைக்கு வருகை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார உதவிகளை வழங்க நடவடிக்கை

இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை அவசர வைத்திய சிகிச்சையை மதிப்பிடுவதற்கும், அதனடிப்படையில் தகவல்களை ஜப்பானிய சுகாதார அமைச்சிற்கு வழங்குவதற்கும் ஜப்பானிய வைத்திய நிபுணர்கள் குழு ஒன்று நேற்றிரவு நாட்டுக்கு வருகை தந்தது.

ஐந்து வைத்தியர்களைக் கொண்ட இந்தக் குழுவுடன் ஜப்பானிய அரசாங்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் குழுவும் வருகை தந்துள்ளனர்.

இந்த குழுவினர் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கைக்குத் தேவையான வைத்தியர்கள் , தாதியர்கள் , உதவியாளர்கள், வைத்திய உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அடுத்த சில நாட்களில் நாட்டிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன உட்பட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும், இலங்கையில் பணியாற்றும் ஜப்பான் தூதரகம் மற்றும் JICA வின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் ஜப்பானிய வைத்திய குழுவை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றிரவு வருகை வந்திருந்தனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, ஜப்பானில் இருந்து நிபுணர்கள் குழு ஒன்று அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நாட்டிற்கு வரவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )