
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறைந்தபட்ச தபால் கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் சேவைகளின் செயற்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

