
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் 22 மணிநேர நீர்வெட்டு
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (08) காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
இதன் காரணமாக, அஸ்கிரிய (மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி), வேகிரிய, பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய), யடிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம் மற்றும் மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
மேலும், கஹவத்த, குருகொட, புலுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பலனகல, மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
நீர் விநியோகம் தடைப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, கிடைக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

