
டித்வா புயல் ; இலங்கைக்கு அவுஸ்திரேலியா அவசர நிவாரண உதவி
டித்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு, அவுஸ்திரேலிய அரசாங்கம் 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான அவசர நிவாரண உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை வலுப்படுத்துவது இந்த நிதியின் பிரதான நோக்கமாகும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

