கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை மாற்றுவதற்கான எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, வரும் டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சு எதிர்பார்த்துவருவதாகவும் அவர் கூறினார்.

எனினும், பாடசாலைகளைத் திறப்பதற்கான தற்போதைய சூழ்நிலை குறித்து இன்று (02) மேலும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டப் பாடசாலைகளையே முதலில் ஆரம்பிக்க முன்வரப்படும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )