
சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்
சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும்.
2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பவனி, நேற்று (03) அதிகாலை பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.

