அகண்டா 2 படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

அகண்டா 2 படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பாலையா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் அகண்டா.

இந்த படம் தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது.

14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷான் சக்சேனா தயாரித்து, போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘அகண்டா 2’.

இதில் பால கிருஷ்ணா கதாநாயகனாகவும், சம்யுக்தா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைக்கான தீர்வு எட்டியதாக தெரிகின்றது.

இந்த நிலையில், புதிய ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அகண்டா -2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12 ந் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )