
330 மில்லியன் ரூபாய் பெறுமதியான2,030,000 சிகரெட்டுகளுடன் 5 பேர் கைது
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 330 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுக அதிகாரசபையின் மூன்று ஊழியர்களும் சந்தேக நபர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வெல்லம்பிட்டி பகுதியில் சிகரெட்டு தொகை உட்பட சந்தேக நபர்களையும் கைது செய்தது.
2,030,000 சிகரெட்டுகள் இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

