
அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண உதவி ஒருங்கிணைப்பு தொடர்பில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) (டிசம்பர் 17) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheவை தனது அலுவலகத்தில் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நிறுவன மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
அனர்த்தத்தின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமையும் மற்றும் தாங்கும் ஆற்றலும் பாராட்டத்தக்கவை என ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், தற்போதைய நிவாரண நடவடிக்கைகள், கடந்த கால குறைபாடுகளிலிருந்து தெளிவான மாற்றத்தை பிரதிபலிப்பதுடன், ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த அணுகுமுறைக்கான முக்கிய திருப்புமுனையாக அமைகின்றது என குறிப்பிட்டார்.

