காலியில் அடைமழை                                              பல வீதிகள் நீரில் மூழ்கின

காலியில் அடைமழை பல வீதிகள் நீரில் மூழ்கின

நேற்று பிற்பகல் முதல் காலி நகரில் பெய்த கனமழையால் நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

காலி பிரதான வீதி, காலி-மாத்தறை பிரதான வீதி, காலி-வக்வெல்ல வீதி, காலி-பத்தேகம பிரதான வீதி, சரெந்துகடே சந்தி, தலபிட்டிய, தனிபொல்கஹா, தங்கெதர, பெலிகஹா மற்றும் சுற்றுலா காலி கோட்டையின் பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்யத் தவறியதாலும், அவற்றின் மீது கட்டப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களாலும் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )