
32 மில்லியன் ரூபாய் பெறுமதியான 390 ரத்தினக் கற்களுடன்கட்டுநாயக விமான நிலையத்தில் பேருவளையை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் கைது
சீனாவிற்கு ரத்தினக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் கைது செய்தனர் .
பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பேருவளைப் பகுதியில் வசிக்கும் 38 மற்றும் 39 வயதுடைய ஸ்லாமிய ரத்தினக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சீனா செங்டு நகருக்குச் செல்லும் சீனா ஏர்லைன்ஸ் CA-426 விமானத்தில் பயணிப்பதற்காக , சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
சுங்க அதிகாரிகளுக்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, அவர்களின் பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தினக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
ரத்தினக் கற்களின் இருப்பின் மதிப்பு சுமார் 32 மில்லியன் ரூபாய் என்று கூறப்படுகிறது.
சபையர், பத்மராக், கிரிஞ்சி, சிவப்பு குவார்ட்ஸ், கனகா, சவரிட், வைரோடி, சவரிட், சந்திரகாந்தா, தோரமல்லி மற்றும் அரனுல் ஆகிய முக்கிய ரத்தின வகைகளைச் சேர்ந்த 756 காரட் எடையுள்ள 390 ரத்தினங்கள் குறித்த பயணப்பைகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

