
ஒரு சிறந்த நாளுக்காகஅன்பு மற்றும் இரக்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாட்டு மக்கள் அனைவரும் உறுதிபூண்டுள்ளனர் -பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி
ஒரு சிறந்த நாளுக்காக அன்பு மற்றும் இரக்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாட்டு மக்கள் அனைவரும் உறுதிபூண்டுள்ளனர் என நத்தார் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்துப் இன மக்களும் ஒன்றிணைந்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான பொதுவான நோக்கத்துடனும் கூட்டுப் பொறுப்புடனும் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்த மில்லியன் கணக்கான மக்களின் அபிலாஷைகள் எந்த வகையிலும் உடைக்கப்படாது என்றும், அவர்கள் விரும்பும் “புதிய நாட்டை” கட்டியெழுப்புவதற்கான குறிக்கோளுக்காக அவர்கள் தொடர்ந்து பாடுபடுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தியில் கூறினார்.
CATEGORIES Sri Lanka

