
ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கொழும்பு – கிராண்ட்பாஸ், ஜோசப் வீதி பகுதியில் புதன்கிழமை (24) இரவு, ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

