
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நடப்பாண்டில் கடந்த 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 98 ஆயிரத்து 987 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் மொத்த எண்ணிக்கை 519,816 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 207,510 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 178,743 பேரும், ஜெர்மனியிலிருந்து 143,999 பேரும், சீனாவிலிருந்து 130,452 பேரும், பிரான்ஸிலிருந்து 107,353 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 105,601 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 195,394 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

