பெருவில் நிலநடுக்கம்

பெருவில் நிலநடுக்கம்

பெரு நாட்டின் கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 67 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்புள்ளி 8.93 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 78.90 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தை உணர்ந்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் தொடர்பான எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )