
நாவலப்பிட்டி பிரதேச செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியைத் தொடர்ந்து நேற்று (29) பிரதேச செயலக வளாகம், களஞ்சிய அறை உட்பட சகல பகுதிகளிலும் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாவலப்பிட்டி பொலிஸார், சிறப்புப் படை, இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆகியோர் களஞ்சிய அறைகளைச் சரிபார்த்து சந்தேகத்துக்குரிய விதத்தில் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
CATEGORIES Sri Lanka

