“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 585 பேர் கைது

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 585 பேர் கைது

“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 272 கிராம் ஹெரோயின், 657 கிராம் ஐஸ், 01 கிராம் கொக்கெய்ன், 244 கிலோ 218 கிராம் கஞ்சா, 122,793 கஞ்சா செடிகள், 04 கிராம் குஷ்ரக் போதைப்பொருள், 08 கிராம் ஹஷீஷ், 738 போதை மாத்திரைகள், 579 கிராம் 840 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 1 கிலோ 384 கிராம் மாவா போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 07 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 600 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 05 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )