10 வகையான புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

10 வகையான புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம், இவ்வருடம் சந்தையில் 10 புதிய மருந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டில் சுமார் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும் வில்லைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் 70 வகையான மருந்து தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த ஆண்டு 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் வில்லைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இதுவரை உயர்ந்த மருந்து உற்பத்தி சாதனை பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2025ஆம் ஆண்டில் ஐந்து புதிய மருந்து தயாரிப்புகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், 2025ஆம் ஆண்டிற்கான அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் ரூ. 27.06 பில்லியனாக பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )