முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

முதலாம் தரம் மற்றும் 6 ஆம் தரத்தைத் தவிர, பாடசாலைகளின் ஏனைய அனைத்து தரங்களுக்குமான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (05) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 6 இன் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள திகதி 2026 ஜனவரி 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 இற்கு பிற பாடசாலைகளிலிருந்து மாணவர்களை அனுமதிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் ஜனவரி 05 முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்குள் மேற்கொள்ளப்படலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை இனங்காணும் செயன்முறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாகவும், தரம் ஒன்றிற்கான உத்தியோகபூர்வ கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )