
தண்டகாரண்யம் படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குநர் அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பயங்கரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
CATEGORIES Cinema

