
புது டெல்லியில் நிலநடுக்கம்
டெல்லியில் இன்று (19) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 8.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மையப்புள்ளி 28.86 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
CATEGORIES India

