திபெத்தில் நிலநடுக்கம்

திபெத்தில் நிலநடுக்கம்

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத்தில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இரவு 11.27 மணியளவில் ஏற்பட்டதுடன், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

சுமார் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 30.15 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 89.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் அமைந்துள்ளதாக முதற்கட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ள திபெத், நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பிரதேசமாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )