எம்பிலிபிட்டியவில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

எம்பிலிபிட்டியவில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

எம்பிலிபிட்டிய வீரசிங்கபுர பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிபிட்டிய வீரசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக மூன்று பேர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்ய எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )