எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் ; உள்நாட்டு பிரதிநிதி நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் ; உள்நாட்டு பிரதிநிதி நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் தொடர்பாக, அதன் உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தாலும் கொழும்பு உயர் நீதிமன்றத்தாலும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் தீர்ப்புகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலிப்பதற்காக, அந்த மனுக்கள் நேற்று மீண்டும் அழைக்கப்பட்டன.

இந்தச் சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே, மேற்கண்ட தகவலை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )