FCID ல் முன்னிலையாக இரண்டு வார அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்ஷ

FCID ல் முன்னிலையாக இரண்டு வார அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்ஷ

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதற்கமைய, பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, இன்று காலை 9 மணிக்கு பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில், சிரிலிய எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்குடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக, பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )