நாடளாவிய ரீதியில் விசேட சோதனை ; 580 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை ; 580 பேர் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நேற்று (26) நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30,792 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 285 பேர் மற்றும் திறந்த பிடியாணைகளின் அடிப்படையில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 435 பேர் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 62 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றச்செயல்களுக்காக 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )