பௌத்தர்களின் விசேட வழிபாட்டிற்குரிய’நவம்’ போயா தினம் இன்று

பௌத்தர்களின் விசேட வழிபாட்டிற்குரிய’நவம்’ போயா தினம் இன்று

‘நவம்’ (Navam Full Moon Poya Day) என்று பௌத்த மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பம் போயா தினம் இன்றாகும் .

புத்த பெருமானின் முதன்மை சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மொக்கல்லானர் ஆகிய இருவருக்கும் ‘அக்கிரசாவக’ பதவி வழங்கப்பட்ட தினம் இதுவாகும்.

மேலும், புத்தர் முதலாவது சங்க மாநாட்டைக் கூட்டியதும் இந்நாளில் தான்.

பௌத்தர்களின் இந்த புனித நாளையொட்டி முக்கிய விஹாரைகளில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பேரெஹெர நிகழ்வுகளும் இடம்பெறும்.

இன்று நாட்டில் பொது விடுமுறை தினம் என்பதுடன்
பௌர்ணமி தினத்தையோட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )