
ஈஸ்டர் தாக்குதல் திட்டமிட்ட சதி ; பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது 2017 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தனது கருத்துகளை அமைச்சர் இன்று (09) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

