
தொலைபேசி உரையாடல் வாக்குவாததில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயது இளைஞர் கொலைசெட்டிக்குளம் – வீரபுரம் பகுதியில் சம்பவம்
தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாததில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் செட்டிக்குளம் – வீரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு குழுவினரால் கூரிய ஆயுதத்தால் குறித்த இளைஞரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்கப்பட்ட இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலைத் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்ய செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகள் நடத்தி வருகின்றனர் .
CATEGORIES Sri Lanka

