
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பாகேற்கமாட்டோம் என தெரிவிக்கும்விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்
இன்றைய வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச விசேட வைத்தியர்கள் சங்கம் பங்கேற்காது என்று அரச விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அசோக குணரத்ன தெரிவித்தார்.
அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கு (Association of Medical Specialists – AMS) எவ்வித தொடர்பும் இல்லை என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது
விசேட வைத்திய நிபுணர்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள சேவை யாப்புக்கு (Service Minute) எதிராகவே வைத்தியர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், அதற்குத் தாம் எவ்வித ஆதரவையும் வழங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர்களுக்கான தனித்துவமான சேவை யாப்பைத் தயாரிக்குமாறு கோரி, நாட்டில் உள்ள 2,300 விசேட வைத்திய நிபுணர்களில் சுமார் 2,060 பேர் கையெழுத்திட்டு அரசாங்கத்திடம் மனு ஒன்றை கையளித்துள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகளைக் கோரியுள்ளதாகவும், அரசாங்கத் தரப்பிலிருந்து அதற்குச் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பெரும்பாலான விசேட வைத்திய நிபுணர்கள் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் என்றும், அவர்களில் எவரும் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
விசேட வைத்திய நிபுணர்கள் இதுவரை ஆற்றி வந்த அனைத்து சேவைகளும் இன்று வழக்கம் போல எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என்றும் அரச விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன தெரிவித்தார்.

