7வது முறையாகவும்  யோவேரி முசேவேனி  உகாண்டா ஜனாதிபதியாகினார்                                                         தேர்தல் முடிவில் மோசடி என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

7வது முறையாகவும் யோவேரி முசேவேனி உகாண்டா ஜனாதிபதியாகினார் தேர்தல் முடிவில் மோசடி என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

உகாண்டா ஜனாதிபதித் தேர்தலில் யோவேரி முசேவேனி ஏழாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார் .

81 வயதான அவர் 40 ஆண்டுகளாக உகாண்டாவை ஆட்சி செய்து வருகிறார் .

இம்முறை தேர்தலில் அவர் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் ,முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் பாபி வைன், என்ற கியாகுலானி சென்டாமு, 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முசோலினியின் தேர்தல் முடிவுகள் போலியானவை என்று அவர் நிராகரித்ததுடன் தனது ஆதரவாளர்களை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, தலைநகர் கம்பாலாவிற்கு அருகிலுள்ள அவரது வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் சுற்றி வளைத்ததாகவும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. :

வெள்ளிக்கிழமை இரவு இராணுவம் தனது வீட்டில் சோதனை நடத்தியதாகவும், மின்சாரத்தைத் துண்டித்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்தச் சுற்றிவளைப்பிலிருந்து தான் தப்பித்துவிட்டதாகவும், தற்போது பாதுகாப்பான ஓரிடத்தில் மறைந்திருப்பதாகவும் அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன .

எனினும், அவரது மனைவியும் குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )