
பிரித்தானிய மன்னர் சார்லஸ்இலங்கையின் 78-ஆவது சுதந்திர தினதிற்கு அனுப்பிய வாழ்த்துசெய்தி
இலங்கையின் 78-ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (பிப்ரவரி 4, 2026) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னர், இலங்கை ஜனாதிபதிக்கும் இலங்கை மக்களுக்கும் விசேட வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள
அந்தச் செய்தியில் ,
இலங்கை மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள மன்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைக்கும் இடையே நிலவும் “நீண்டகாலக் கூட்டாண்மை” மற்றும் “ஆழமான வரலாற்றுப் பிணைப்பை” சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கைச் சமூகம் அந்த நாட்டிற்கு வழங்கும் முக்கியமான பங்களிப்பினை அவர் பாராட்டியுள்ளார்.
கல்வி, வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பஹ்ரைன் நாட்டின் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபா (Hamad bin Isa Al Khalifa) அவர்களும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

