வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம், இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இன்று (04) பிற்பகல் 1.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படும் புனித சின்னங்கள், ஹுனுபிட்டி கங்காராம விஹாரைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டதன் பின்னர், இந்நாட்டு மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.

புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் நாளை (05) முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )