
பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிறில் முனசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு தலைமை நீதவான் இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

