
எம்.பி. சாந்த பத்மகுமார சம்பவம் ; பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எம்பிலிபிட்டிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றவியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

