
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளின் தளர்வுக்குப் பின் நாட்டில் வாகன பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த முதலாம் திகதி முதல் 417,337 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை மோட்டார் சைக்கிள்களாகும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி வரை 290,305 மோட்டார் சைக்கிள்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே காலப்பகுதியில், 81,143 கார்களும் ,20,820 முச்சக்கரவண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், டூவல் பர்பஸ் வாகனங்கள், சிங்கிள் கப்(single cabs), பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 55,237வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 35,488 மோட்டார் சைக்கிள்கள், 13,096 கார்கள் மற்றும் 3, 488 முச்சக்கரவண்டிகளும் உள்ளடங்குகின்றன.

