
விராட் கோலியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்திய அணி அமெரிக்க அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
மும்பையில் நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 4 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.
இந்திய பந்துவீச்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியின் மூலம், இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
சூர்யகுமார் இதுவரை 17 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ள நிலையில், விராட் கோலி 16 முறை இந்த விருதை வென்றுள்ளார்.

